பக்கம் எண் :

மூக

110

மலையருவி

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    முருங்கைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
                 

15

காரைக்கால் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    கம்மல்ரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
                

16

பில்லானூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    பில்லாக்கொண்ணு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
        

17

காரைக்குடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    கால்தண்டை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

18

பாவநாசம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    பாதரசம் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
                

19

ஒலவக்கோட்டுச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    ஒட்டியாணம் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
        

20

வைகையாற்று ஓரத்திலே - ஏலங்கிடி லேலோ
    கைவளையல் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

21