பக்கம் எண் :

New Page 1

ஆண் பெண் தர்க்கம்

109

செவ்வாய்ப்பேட்டைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    செவந்திப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
              

8

மஞ்சக்குப்பம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மாலைரெண்டு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

9

வேலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    வெட்டிவேரு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

10

ஆரப்பாளையம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    அரளிப்பூவு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

11

வாணியம்பாடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    வாடாமல்லிகை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

12

வடமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    வாழைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

13

மூக்குப்பேரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மூக்குத்தியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.   
                  

14