பக்கம் எண் :

108

மலையருவி

சந்தை வியாபாரம்

காதலி கேட்டல்

மானாமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மருக்கொழுந்து வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

1

தாடிப்பத்திச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    தாழம்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
       

2

ரோட்டோரத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    ரோசாப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
                

3

மண்டபத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மல்லிகைப்பூ வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
          

4

குத்தாலத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    கொண்டைத்திருகு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

5

செட்டிகுளம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    செந்தாமரை வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

6

பூலத்தூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    பூலாங்கிழங்கு வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
        என்ன செய்யலாம் மாமா - நாம்

        ஏது செய்யலாம் மாமா.
                                           

7