பக்கம் எண் :

New Page 1

ஆண் பெண் தர்க்கம்

107

பெரட்டுக் களத்துக்குப்போய்த் - தங்கமாமாவே
        பெரண்டழுகப் பிரியமில்லை - பொன்னுமாமாவே
    கஞ்சியில்லா விட்டால்தானே - தங்கமாமாவே
        அஞ்சுராத்தல் கொழுந்துவேணும் -
                                பொன்னுமாமாவே.

43

அரிசிவாணாம் பருப்புவாணாம் தங்கமாமாவே
        அரிசிப்பஞ்சம் எனக்குஇல்லை - பொன்னுமாமாவே
    பிச்சைக்காரி இண்ணுநீஎண்ணித் - தங்கமாமாவே
        பிதற்றாதே கண்டபடி - பொன்னுமாமாவே.        

44

காடுகரை இங்கேஇருக்கத் - தங்கமாமாவே
        காணாதசீமை ஏன்போகப் - பொன்னுமாமாவே
    எள்ளுக்காடு களைஎடுக்கத் - தங்கமாமாவே
        எட்டாளு எனக்குவேணும் - பொன்னுமாமாவே.
   

45

நல்லநிலா வெளிச்சத்திலே - தங்கமாமாவே
        நான்படுப்பேன் காற்றோட்டமா - பொன்னுமாமாவே
    கலியாணம் பண்ணுமுந்தித் - தங்கமாமாவே
        கன்னிகுளி குளிப்பாளா - பொன்னுமாமாவே.        

46

மலைக்குமுதல் போனால்தானே - தங்கமாமாவே
        மலைஇறங்கி ஊர்வரணும் - பொன்னுமாமாவே
    பொய்க்காலுக் குதிரையிலே - தங்கமாமாவே
        பொண்ணுவேசம் உனக்குச்சரி -
பொன்னுமாமாவே. 
      

47

உன்அக்காதங் கச்சிக்குவேணும் - தங்கமாமாவே
        இப்படியாக் கொத்தலீவு - பொன்னுமாமாவே
    கலியாணம் வேணுமிண்ணா - தங்கமாமாவே
        கட்டழகன் இங்கேஇருக்கான் -
பொன்னுமாமாவே.   
    

48

________