பக்கம் எண் :

106

மலையருவி

சீக்கில்லாமல் வேலைசெய்தால் - தங்கம்தையலாளே
        சீலைவேறே இனாம்கிடைக்கும் - பொன்னுகுயிலாளே   
    கொழுந்தில்லாத காலத்திலே - தங்கம்தையலாளே
        களையெடுத்தால் காசுவேறே - பொன்னுகுயிலாளே.       

37

கணக்குத்தீர்க்கும் காலத்திலே - தங்கம்தையலாளே
        கம்பிளி இனாமும்வேறே - பொன்னுகுயிலாளே
    பிள்ளைபெறும் காலத்திலே - தங்கம்தையலாளே
        பிள்ளைரூவா அஞ்சுவேறே - பொன்னுகுயிலாளே.
       

38

மலைஇறங்கி ஊர்போகத் - தங்கம்தையலாளே
        வழிச்செலவுக் காசுவேறே - பொன்னுகுயிலாளே
    மார்கழி இருபத்தஞ்சிலே - தங்கம்தையலாளே
        மகராசா காசுவேறே - பொன்னுகுயிலாளே.

39

மாதவிடாய்க் காலத்திலே - தங்கம்தையலாளே
        மகாராசா லீவுவேறே - பொன்னுகுயிலாளே
    கலியாண காலத்திலே - தங்கம்தையலாளே
        கண்டிராசா காசுவேறே - பொன்னுகுயிலாளே.  
        

40

தையல் மறுத்தல்

பண்ணைவேலை நீசெஞ்சால் - தங்கமாமாவே
        பண்ணைக்கூலி போட்டுத்தாரேன் - பொன்னுமாமாவே
    எட்டாத பழத்துக்குநீ - தங்கமாமாவே
        கொட்டாவிஏன் விட்டுப்போறே -
பொன்னுமாமாவே.        

41

ஏட்டுச் சுரைக்காய்வந்து - தங்கமாமாவே
        கறிக்குதவுமா நீசொல்லு - பொன்னுமாமாவே
    வருசவேலை ஒண்ணும்வாணாம் - தங்கமாமாவே

        வாரவேலை ஒண்ணும்வாணாம் - பொன்னுமாமாவே.          

42