பக்கம் எண் :

New Page 1

ஆண் பெண் தர்க்கம்

105

பெரியதுரை உனக்கொசத்தி - தங்கமாமாவே
        பெரியவரை வரமாட்டேன்நான் -
    பொன்னுமாமாவே.
        . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .        
 

32

மாமன் மீண்டும் அழைத்தல

ஆள்ஒண்ணுக்கு அஞ்சுரூபா - தங்கம்தையலாளே
        அட்வான்ஸு நான்கொடுப்பேன் -
பொன்னுகுயிலாளே
    அஞ்சுமணி வண்டியேறித் - தங்கம்தையலாளே
        அங்குலக் குறிச்சிபோவோம் - பொன்னுகுயிலாளே.

33

சொல்லும்கதை கேளுபெண்ணே - தங்கம்தையலாளே
        சொல்மீறிப் போகாதேடி - பொன்னுகுயிலாளே
    வருசவேலை செஞ்சியின்னா - தங்கம்தையலாளே
        வாங்குவாயடி கைநிறையப் -
பொன்னுகுயிலாளே.

34

பெரட்டுக்களம் போய்நீ - தங்கம்தையலாளே
        பேர்கொடுத்தால் போதுமடி - பொன்னுகுயிலாளே
    அஞ்சுராத்தல் கொழுந்தெடுத்தால் - தங்கம்தையலாளே
        அஞ்சணாக் கிடைக்குமடி - பொன்னுகுயிலாளே.   
   

35

ஆறுநாளுக் காறுபடி - தங்கம்தையலாளே
        அரிசிதானும் கிடைக்குமடி - பொன்னுகுயிலாளே
    வாரத்துக்கு ரூவாஒண்ணு - தங்கம்தையலாளே
        வாங்குவாயடி செலவுக்குத்தான் - பொன்னுகுயிலாளே.   

36