பக்கம் எண் :

104

மலையருவி

தாய்மலை போலிருக்காள் - தங்கமாமாவே
        தாயமுடி வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே
    அறியாப் பருவத்திலே - தங்கமாமாவே
        பெரியாறு வரமாட்டேன்நான் -
பொன்னுமாமாவே.
       

27

பாலுபழம் கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
        பாலாறு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
    தலைக்குத்தலை நானிருக்கத் - தங்கமாமாவே
        தலையாறு வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே.    

28

இஞ்சிதின்ற குரங்குபோலே - தங்கமாமாவே
        இஞ்சிக்காடு வரமாட்டேன்நான் பொன்னுமாமாவே
    மஞ்சள்நான் பூசமாட்டேன் - தங்கமாமாவே
        மஞ்சிமலை வரவும்மாட்டேன் - பொன்னுமாமாவே.  
 

29

கோழிக்கறி தின்னமாட்டேன் - தங்கமாமாவே
        கோழிக்கானம் வரவுமாட்டேன்நான் -
                                    பொன்னுமாமாவே
    பாம்பைப்பார்த்தால் பயமாய்இருக்கும் - தங்கமாமாவே
        பாம்பனாறு வரமாட்டேன்நான் -
                                    பொன்னுமாமாவே.

30

வாழைமேலே பிரியம்இல்லை - தங்கமாமாவே
        வாழையடி வரமாட்டேன்நான் -
                                    பொன்னுமாமாவே
    ஆனைண்ணாதெய் வானைக்கும்பயம் - தங்கமாமாவே
        ஆனைக்கட்டு வரமாட்டேன்நான் -
                                    பொன்னுமாமாவே.

31