கஞ
கஞ்சிக் கலயங்கொண்டு
- குட்டி
கருக்கரிவாள் தோளில்வச்சுப்
பில்லறுக்கப் போறபொண்ணே
- ஒரு
பில்லைமரம் காவலோடி?
63
கொடிபிடுங்கி எள்விதைத்துக்
- குட்டி
கொடிவழியாப் போறபொண்ணே
மழைபெய்து இலைவிழுந்தால்
- குட்டி
மறப்பேனோடி உன்ஆசையை?
64
வாழையடி உன்கூந்தல் - குட்டி
வயிரமடி பல்லுக்காவி
ஏழையடி நான்உனக்குக் - குட்டி
இரங்கலையா உன்மனசு?
65
கூடலூரு மேட்டுமேலே - குட்டி
கூடைமண் எடுக்கும்பொண்ணே
அட்டை கடிக்குதோடி - உன்
அழகான மேனியெல்லாம்.
66
கான மயிலேஉன்னைக் - குட்டி
கைவிடுவ தில்லையென்று
மீனாட்சி கோயிலிலே -
குட்டி
வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.
67
கறுத்தபையா தூண்டிற்காரா
- அடே
கறிக்குரெண்டு மீனுதாடா
சிவத்தபொண்ணே நீவந்தியின்னா
- நான்
சீமைக்கெண்டை ஒண்ணுதாரேன்.
68
கல்லைவெட்டி முள்ளைவெட்டிக்
- குட்டி
கற்றாழைச் சோத்தைவெட்டிக்
குத்துக்கட்டை ரெண்டுவெட்டி
- குட்டி
கோடாலியும் மழுங்கிப்போச்சே.
69
|