பக்கம் எண் :

New Page 1

தொழிலாளர் பாட்டு

 

சுண்ணாம்பு குத்தும் பாட்டு

    சிம்பிசிம்பிஐயா எடுத்துலக்கை
        சிற்றெலும்பை நோவுதையா.                 

1

மன்னிமன்னி எடுத்துலக்கை
        மணிக்கட்டெல்லாம் நோவுதையா.  
              

2

கார்த்தாலே வந்தபெண்கள்
        கானலிலே மாளுறோமே.
   

3

விடியலிலே வந்தபெண்கள்
        வெய்யிலிலே மாளுறோமே.
         

4

வயிறுரொம்பப் பசிக்குதையா
        வடித்தகஞ்சி பார்த்துவாரேன்.
            

5

குலையைப்பசி தாவுதையா
        கூழ்ப்பானை பார்த்துவாரேன்.
       

6

வாழைமரம் வெட்டப்போய்
        வாய்போச்சே கோடாலி.
          

7

வாய்போன கோடாலியைக்
        கொல்லன்வீடு சேர்த்துப்போங்க
               

8

தென்னமரம் வெட்டப்போய்த்
        தெறிச்சுப்போச்சே கோடாலி.
               

9

தெறிச்சுப்போன கோடாலியை
        கொல்லன்வீடு சேர்த்துப்போங்க.
    

10

_________