|
New Page 1
வேறு
அந்தஅரிவாள் இந்தஅரிவாள்
-
ஏலேலக்குயிலேலல்லோ
உருக்கிவைச்ச கருக்கரிவாள்
-
ஏலேலக்குயிலேலல்லோ
1
சாயம்நல்ல பிடியரிவாள்
-
ஏலேலக்குயிலேலல்லோ
சாயுதம்மா நெல்லும்புல்லும்
-
ஏலேலக்குயிலேலல்லோ
2
நெல்லும்புல்லும் அறுத்தறுத்து
-
ஏலேலக்குயிலேலல்லோ
நேரான கட்டுக்கட்டி
-
ஏலேலக்குயிலேலல்லோ
3
கட்டுக்கட்டித் தூக்கையிலே
-
ஏலேலக்குயிலேலல்லோ
கண்டுக்கிட்டான் காட்டுக்காரன்
-
ஏலேலக்குயிலேலல்லோ
4
மாலைநல்லா மயங்கலையே -
ஏலேலக்குயிலேலல்லோ
மல்லிகைப்பூ வாடலையே
-
ஏலேலக்குயிலேலல்லோ
5
சின்னமலை ஓரத்திலே - ஏலேலக்குயிலேலல்லோ
சீலையைப் பறிகொடுத்தேன்
ஏலேலக்குயிலேலல்லோ
6
தங்கமலை ஓரத்திலே -
ஏலேலக்குயிலேலல்லோ
தாலியைப் பறிகொடுத்தேன்
-
ஏலேலக்குயிலேலல்லோ
7
|