|
க
காசுக்கடை ஆயிரமாம் -
ஏலங்கிடி லேலோ
தாசிக்கடை ஆயிரமாம்
- ஏலங்கிடி லேலோ.
86
கோடிவெள்ளைக் காரருங்கூட
- ஏலங்கிடி லேலோ
லேடியோடே
இருக்கிறாங்க -
ஏலங்கிடி லேலோ.
87
ஜோடிபோட்டுப்
போறாங்களாம் -
ஏலங்கிடி லேலோ
பாடிப்பாடி வாறாங்களாம் -
ஏலங்கிடி லேலோ.
88
ஆளும் அழுகுதாண்டி - ஏலங்கிடி
லேலோ
அவன் நடை தளுக்குத்தாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
89
வேட்டிமேலே கோட்டுத்தாண்டி
-
ஏலங்கிடி
லேலோ
கோட்டுக்குள்ளே நோட்டுத்தாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
90
வாயிலே சுருட்டுத்தாண்டி -
ஏலங்கிடி லேலோ
வகைவகையா வண்டிதாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
91
மூக்குக்கண் ணாடிதாண்டி -
ஏலங்கிடி லேலோ
முறுக்கிவிட்ட -
மீசைதாண்டி
ஏலங்கிடி லேலோ.
92
பாட்டுக்காரன் தாண்டிஅவன்
- ஏலங்கிடி லேலோ
பாடப்பாட ஆடலாண்டி
- ஏலங்கிடி லேலோ.
93
பட்டுப்பா வாடைதாண்டி -
ஏலங்கிடி லேலோ
பட்சமாத் தருவாண்டி
- ஏலங்கிடி லேலோ.
94
பொட்டுத்தா வணிதாண்டி -
ஏலங்கிடி லேலோ
புத்தம் புதிசாப்பாத்து
- ஏலங்கிடி லேலோ.
95
|