பக்கம் எண் :

பஞ

தொழிலாளர் பாட்டு

133

பஞ்சுமெத்தை பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        பார்க்கப்பார்க்கப் பகட்டுதடி -
                            ஏலங்கிடி லேலோ.
       

75

பூந்தோட்டத்தைப் பார்க்கிறாண்டி -
                            ஏலங்கிடி லேலோ
        பூலோகமே அங்கிருக்கு - ஏலங்கிடி லேலோ.        

76

ராசாவீட்டில் இருக்கிறாப்போல் - ஏலங்கிடி லேலோ
        ரோசாப்பூ நிற்குதடி - ஏலங்கிடி லேலோ.        

77

மல்லிகைப்பூ மருக்கொளுந்து - ஏலங்கிடி லேலோ
        மரம்மரமா நிற்குதடி - ஏலங்கிடி லேலோ.   
    

78

செவந்திப்பூவுஞ் செந்தாமரையும் - ஏலங்கிடி லேலோ
        செங்கனியும் இருக்குதடி - ஏலங்கிடி லேலோ.        

79

பாக்குத்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
        பனந்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ.        

80

தென்னந்தோப்பு ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
        தெவிட்டாத வாழைத்தோப்பாம் -
                                ஏலங்கிடி லேலோ.

81

காப்பித்தோட்டம் ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
        கள்ளுக்கடை கணக்கில்லையாம் -
                                ஏலங்கிடி லேலோ.

82

எல்லாத்தோட்டமும் அங்கிருக்கு -
ஏலங்கிடி லேலோ
        ஏலத்தோட்டமும் கூடஇருக்கு -
                                ஏலங்கிடி லேலோ.
   

83

சாப்புக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
        காப்பிக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ.     
  

84

ஜவுளிக்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ
        வளையல்கடை ஆயிரமாம் - ஏலங்கிடி லேலோ.    

85