பட
பட்டாக்கத்தியை நான்எடுத்துக்
- குத்தி
பாதையோரம் போகையிலே
காட்டுமிருக சாதியெல்லாம்
- குட்டி
கையெடுத்துக் கும்பிடுண்டி.
77
வெற்றிலை இல்லையடி - குட்டி
வெறும்வாயா நான்போறேண்டி
கொடுக்கஉனக்கு மனசிருந்தால்
- குட்டி
கூலியாள் பிடிச்சனுப்பு.
78
வங்காள நாட்டுக்கொக்கே
- அடி
வனமேறி மேயுங்கொக்கே
சிங்கார வில்லெடுத்து -
நான்உன்
சிறகெல்லாம்
முறிக்கிறேன்பார்.
79
வைக்கோல் துரும்புபோலே
- குட்டி
வயிரக்கட்டைச் செக்குபோலே
சித்ரபுத்ரன் தேரைப்போலே
- குட்டி
சுத்துறாளாம் சின்னப்பொண்ணு.
80
மூணு ஜிலுப்பாக்காரா - அடா
முறுக்கிவிட்ட மீசைக்காரா
தாழம்பூ வேட்டிக்காரா -
மாமா
தங்கிப்போனால் ஆகாதோ?
81
ஈரோட்டுச் சாயச்சேலை -
குட்டி
இருபத்து நாலுமுழம்
சுத்துக்குப் பத்தலேண்ணு -
குட்டி
சுண்டுறாளாம் மூஞ்சியெல்லாம்.
82
மஞ்சள் புடவைக்காரி - குட்டி
மாதுளம்பூக் கூடைக்காரி
மஞ்சள் புடவையிலே - குட்டி
மருக்கொழுந்து வீசுதடி.
83
|