பக்கம் எண் :

தெம்மாங்கு

15

திண்டுக்கல் திருட்டுப்பொண்ணே - குட்டி
        திசைதப்பிப் போனவளே

    பூப்பறித்து விற்கப்போய்க் - குட்டி
        புருசனைநீ தோற்றையடி?
                   

84

ஆரடிநீ புல்லுக்காரி - குட்டி
        அறுகம்புல்லுச் சுங்குக்காரி

    சுங்கிலேஒரு சூச்சம்வச்ச - குட்டி
        சுட்டிப்பையன் நான்தானடி.
                      

85

காமத் தலைவலிடி - எனக்குக்
        கண்சிவந்த தலைவலிடி

    மாயத் தலைவலிடி - குட்டி
        மருந்துபோட்டும் நிற்கலைடி.
                 

86

சாதிக்கோ ழியைஅடிச்சுக் - குட்டி
        சாறுநல்லாக் காய்ச்சிவச்சு

    நல்லெண்ணெய் கூடஊத்திக் - குட்டி
        நடத்துறாளாம் கைமருந்து.                      

87

வம்பொன்றும்நான் பண்ணலையே - சாமி
        வாக்குவாதம் பண்ணலையே

    இன்பம்உங்கள் மேலிருந்தால் - சாமி
        இடைஞ்சல்ஒன்றும் வந்திடாதே.
                

88

ஆஸ்பத்திரி மூலையிலே - குட்டி
        ஆளடங்கும் சோலையிலே

    காபித்தண்ணிநீ தந்ததாலே - குட்டி
        கசக்குதடி என்வாய்பூரா.                    

89

சந்திரரே சூரியரே - சாமி
        தருமகுல தேவர்களே

    இந்திரரைப் பார்த்துத்தான்நான் - சாமி
        எடுத்துச்சொல்வேன் தெம்மாங்கைத்தான்.
                

90