New Page 1
தெம்மாங்குப் பாட்டுப்பாடிச்
- சாமி
தெருத்தெருவாய்ப்
போய்விட்டாலும்
அன்பான வார்த்தைசொல்லிச்
- சாமி
அழைக்கத்தானும் நாதியில்லை.
91
ஆழக் கரையிலேதான் - அடி
அழகான கல்புதைத்து
நீளக் கரையிலேதான் -
அடி
நின்றடிக்கும் வண்ணாத்தியே.
92
கசக்க அறுபதுநாள் - அடி
கஞ்சிபோட முப்பதுநாள்
தூக்கியடிக்கத் தொண்ணூறுநாள்
- அடி
தோய்ச்சுப்போட முந்நூறுநாள்.
93
வடிவா வடிவழகா - மாமா
வட்டமிட்ட பொட்டழகா
சாய்ந்த நடையழகா -
மாமா
சந்தனப் பொட்டழகா.
94
உன்னைநான் விடுவதில்லை
- மாமா
ஒருத்தர்முகம்
பார்ப்பதில்லை
என்னஎன்ன நீதருவாய் -
மாமா
என்னைவச்சு ஆதரிக்க?
95
அத்திமர மானேனேநான் -
குட்டி
அத்தனையும் பிஞ்சானேனே
நத்திவரும் பொண்களுக்குக்
- குட்டி
முத்துச்சரம் நானானேனே.
96
கோட்டைக்குள்ளே
கொடியிருக்கு - குட்டி
கொடியைச்சுற்றிப்
பழமிருக்கு
சீமையாளும் ராசாவுக்குக்
- குட்டி
சிங்கக்கொடி தானிருக்கு.
97
|