பக்கம் எண் :

கண

தெம்மாங்கு

17

கண்டிகிண்டி என்னாதேடா - மாமா
        கண்டிக்குநீ போகாதேடா

    முத்துவிற்கும் கண்டியிலே - மாமா
        முன்பழக்கம் ஆரும்இல்லை.
                

98

இடிஇடித்து மழைபெய்யக் - குட்டி
        இருண்டவெள்ளம் திரண்டோடக்

    குடைபிடித்து நான்வாறேண்டி - குட்டி
        குமரிப்பொண்ணே எழுந்திரடி.
           

99

நாவல் பழமேஅடி - குட்டி
        நான்பூசும் சந்தனமே

    ஏலம் கிராம்பே குட்டி - உன்னை
        என்னசொல்லிக் கூப்பிடுவேன்?
              

100

கூப்பிட்ட சத்தத்துக்குப் - பதில்
        குயில்கூவுதுண்ணு நான்இருந்தேன்

    கொண்டவன்னு தெரியாமல்நான் - மாமா
        கூசாமல் ஓடியாரலைநான்.
               

101

கூடார வண்டியிலே - பையா
        குயிலாளைத் தூக்கிவச்சு

    தட்டிவிடடா வண்டியைத்தான் - பையா
        சத்திரம் போய்ப்படுப்போம்.                   

102

வண்டி அலையுதடா - பையா
        வண்டிஓட்டத் தெரியலையோ

மாடலைந்து போகுதடா - பையா
        மதிகெட்ட வண்டிக்காரா.

103

கறுத்த கறுத்தஆடு
        கருவேலங்காய் தின்றஆடு

    மெத்தக் கறுத்தஆடு
        மேல்மலையை நோக்குதடி.
             

104
____________________________________________________

    101. ஓடிவரவில்லை நான்.