New Page 1
குள்ளிமாடும்
புள்ளிமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா
- ஏலங்கிடி லேலோ.
7
பால்கொடுக்கிற பசுவுங்கூட
- ஏலங்கிடி லேலோ
பையப்பைய மிதிக்குதையா
- ஏலங்கிடி லேலோ.
8
பல்லுப்போடாத காளைக்கன்றும்
-
ஏலங்கிடி லேலோ
பால்மறந்த கிடாரிக்கன்றும்
- ஏலங்கிடி லேலோ.
9
பரந்துபரந்து மிதிக்குதையா
- ஏலங்கிடி லேலோ
பாய்ந்துபாய்ந்து மிதிக்குதையா
-
ஏலங்கிடி லேலோ
10
எல்லாமாடும் சேர்ந்துதானும்
- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா
- ஏலங்கிடி லேலோ.
11
கால்படவும் கதிருபூரா -
ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா -
ஏலங்கிடி லேலோ.
12
நெல்லுவேறே வைக்கோல்வேறே
-
ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க
- ஏலங்கிடி லேலோ.
13
வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம்
-
ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா
-
ஏலங்கிடி லேலோ.
14
ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்
-
ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால்நெல்லு
- ஏலங்கிடி லேலோ.
15
அலங்கன்அலங்கி ரெண்டுபேருக்கும்
-
ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக்கூலி
- ஏலங்கிடி லேலோ.
16
|