பக்கம் எண் :

வண

154

மலையருவி

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -
                                ஏலங்கிடி லேலோ
    வருகுதையா அரண்மனைக்கு - ஏலங்கிடி லேலோ. 
      

17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க -
                                ஏலங்கிடி லேலோ
    ஆயிரங்கண் வேணுமையா - ஏலங்கிடி லேலோ.
        

18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் -
                                ஏலங்கிடி லேலோ.      
 

    புள்ளைகளுக்கு வேகுதையா - ஏலங்கிடி லேலோ.

19

    வெள்ளிசெவ்வா வேளையிலே - ஏலங்கிடி லேலோ
    வேகுதையா காய்கறியும் - ஏலங்கிடி லேலோ.

20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
    குளுமையெல்லாம் நிறைக்குதையா -
                                ஏலங்கிடி லேலோ.
      

21

தப்புநெல்லும் தவறுநெல்லும் - ஏலங்கிடி லேலோ
    தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ.        

22

கூனற்கிழவி கூடைமுறத்தை - ஏலங்கிடி லேலோ
    கூனிக்கூனிக் கொண்டுபோறாள் - ஏலங்கிடி லேலோ.
        

23

கூட்டிப்பொறுக்கிக் கூடையைரொப்பி -
                                ஏலங்கிடி லேலோ
    வீட்டுக்குப்போறா வேடிக்கையாத்தான் -
                                ஏலங்கிடி லேலோ.

24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு -
                                ஏலங்கிடி லேலோ
    சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு -
                                ஏலங்கிடி லேலோ.
    

25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
    வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ.  
     

26

_______