சந
சந்தனத்தேவன் பெருமை
எல்லாரு காடுதானும் - ஏலங்கிடி
லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு
ஏலங்கிடி லேலோ.
1
சந்தனம் காடுதானும் -
ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு
- ஏலங்கிடி லேலோ
2
எல்லாரு வீடுதானும் - ஏலங்கிடி
லேலோ
ஏழைக்கேற்ற
குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ
3
சந்தனம் வீடுதானும் -
ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு -
ஏலங்கிடி லேலோ.
4
எல்லாரும் கட்டும்வேட்டி
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
- ஏலங்கிடி லேலோ.
5
சந்தனம் கட்டும்வேட்டி -
ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி
- ஏலங்கிடி லேலோ
6
எல்லோரும் போடும்சட்டை
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை
-
ஏலங்கிடி லேலோ.
7
சந்தனம் போடும்சட்டை -
ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை
- ஏலங்கிடி லேலோ.
8
எல்லாரு திருட்டுத்தானும்
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு
- ஏலங்கிடி லேலோ.
9
சந்தனம் திருட்டுத்தானும்
- ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு
- ஏலங்கிடி லேலோ.
10
எல்லாரும் தின்னும்சோறு
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற
பெருநெல்சோறு -
ஏலங்கிடி லேலோ.
11
சந்தனம் தின்னும்சோறு -
ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு - ஏலங்கிடி லேலோ.
12
|