எல
எல்லாரும் ஏறும்வண்டி -
ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி
-
ஏலங்கிடி லேலோ.
13
சந்தனம் ஏறும்வண்டி -
ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி
- ஏலங்கிடி லேலோ.
14
எல்லாரும் வெட்டும்கத்தி
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி
-
ஏலங்கிடி லேலோ.
15
சந்தனம் வெட்டும்கத்தி
- ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி
- ஏலங்கிடி லேலோ.
16
எல்லாருங் கட்டும்பொண்ணு
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தப்பொண்ணு
-
ஏலங்கிடி லேலோ.
17
சந்தனம் கட்டும்பொண்ணு
- ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு
-
ஏலங்கிடி லேலோ.
18
எல்லாரும் போடும்மிஞ்சி
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளிமிஞ்சி
-
ஏலங்கிடி லேலோ.
19
சந்தனம் போடும்மிஞ்சி
- ஏலங்கிடி லேலோ
சரியான
வெள்ளிமிஞ்சி - ஏலங்கிடி லேலோ.
20
எல்லோரும் போடும்வெற்றிலை
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்றிலை
-
ஏலங்கிடி லேலோ.
21
சந்தனம்
போடும்வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
சரியான
கொழுந்துவெற்றிலை -
ஏலங்கிடி லேலோ.
22
|