எல
எல்லாரு துணிப்பெட்டியும்
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்
-
ஏலங்கிடி லேலோ.
23
சந்தனம் துணிப்பெட்டிதான்
- ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம்
-
ஏலங்கிடி லேலோ.
24
எல்லாரும் படுக்குங்கட்டில்
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில்
-
ஏலங்கிடி லேலோ.
25
சந்தனம் படுக்குங்கட்டில்
- ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில்
- ஏலங்கிடி லேலோ.
26
எல்லாரு கழுத்திலேதான் -
ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம்
-
ஏலங்கிடி லேலோ.
27
சந்தனம் கழுத்திலேதான்
- ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம்
- ஏலங்கிடி லேலோ.
28
எல்லாரும் குடிக்கிறது -
ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர்
-
ஏலங்கிடி லேலோ.
29
சந்தனம் குடிக்கிறது -
ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர்
- ஏலங்கிடி லேலோ.
30
எல்லாரும் சாப்பிடும்இலை
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை
- ஏலங்கிடி லேலோ.
31
சந்தனம் சாப்பிடும் இலை
- ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -
ஏலங்கிடி லேலோ.
32
எல்லோரும் படுக்கும்பாயி
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி
- ஏலங்கிடி லேலோ.
33
சந்தனம் படுக்கும்பாயி -
ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான்பாயி
- ஏலங்கிடி லேலோ.
34
|