பக்கம் எண் :

எல

158

மலையருவி

எல்லோரும் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -
                                    ஏலங்கிடி லேலோ.
     

35

சந்தனம் போடும்மோதிரம் - ஏலங்கிடி லேலோ
        சரியான வைரமோதிரம் - ஏலங்கிடி லேலோ.      
 

36

எல்லாரும் பண்ணும்சவரம் - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற முகச்சவரம் -
                                    ஏலங்கிடி லேலோ.
      

37

சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
        சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ.        

38

எல்லாரும் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் -
                                    ஏலங்கிடி லேலோ.
     

39

சந்தனம் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
        சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ.        

40

எல்லாரும் போடும்சண்டை - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற வாய்ச்சண்டை -
                                    ஏலங்கிடி லேலோ.
     

41

சந்தனம் போடும்சண்டை - ஏலங்கிடி லேலோ
        சரியான வாளுச்சண்டை - ஏலங்கிடி லேலோ.        

42

எல்லாரும் படிக்கும்இடம் - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற பள்ளிக்கூடம் -
                                    ஏலங்கிடி லேலோ.
  

43

சந்தனம் படிக்கும்இடம் - ஏலங்கிடி லேலோ
        சரியான ஜெயிலுக்கூடம் - ஏலங்கிடி லேலோ. 
      

44

எல்லாரும் திருடுவது - ஏலங்கிடி லேலோ
        ஏழைக்கேற்ற கிழட்டுஆடு - ஏலங்கிடி லேலோ.    

45