சந
சந்தனம் திருடுவது - ஏலங்கிடி
லேலோ
சரியான கொழுத்தஆடு
- ஏலங்கிடி லேலோ.
46
எல்லாரு கூட்டாளிகள் -
ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற சமுசாரிகள்
- ஏலங்கிடி லேலோ.
47
சந்தனம் கூட்டாளிகள் -
ஏலங்கிடி லேலோ
சரியான தில்லுமாறிகள்
- ஏலங்கிடி லேலோ.
48
எல்லாரும் குடியிருப்பு -
ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பட்டிக்காடு
- ஏலங்கிடி லேலோ.
49
சந்தனம் குடியிருப்பு -
ஏலங்கிடி லேலோ
சரியான கரட்டுக்காடு
- ஏலங்கிடி லேலோ.
50
எல்லாரு துடைக்குள்ளேதான்
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற
சதைஎலும்பாம் -
ஏலங்கிடி லேலோ.
51
சந்தனம் துடைக்குள்ளேதான்
- ஏலங்கிடி லேலோ
சரியான நரிக்கொம்புதான்
-
ஏலங்கிடி லேலோ.
52
எல்லாரும் போலீசென்றால்
- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான்
-
ஏலங்கிடி லேலோ.
53
சந்தனத்துக்குப் போலீசென்றால்
- ஏலங்கிடி லேலோ
சரியான சக்காந்தமாம்
- ஏலங்கிடி லேலோ.
54
___________
ரங்கோன் வாழ்க்கை
பஞ்சம் பிழைக்க ரங்கோன்
போனேன்
கல்லைப் பிளக்கச்சொன்னான்
கல்லைப் பிளக்க வகைதெரியாமே
கையைப் பிளந்துக்கிட்டேன்.
1
______________________________________________________
54. சக்காந்தம்
- பரியாசம்.
|