பக்கம் எண் :

160

மலையருவி

காளி சிலையைக் கணக்கா வரைந்துதான்
        கல்லிலடிக்கச் சொன்னான்
    கல்லுருட்டித் திரட்டி அடிக்கையிலே
        காலை ஒடிச்சுக்கிட்டேன்.
        

2

வீட்டுக்கு மூலைக் கல்லடிக் கச்சொன்னான்
        வீடெல்லாம் கட்டச்சொன்னான்
    வீட்டிலே குற்றங் குறையிருந்த தாலே
        வீசினான் சாட்டையாலே.
              

3

கோடிகோ டிக்கல்லு கொண்டா ரச்சொன்னான்
        குறுக்குக்கல் அடிக்கச்சொன்னான்
    குறுக்குக்கல் குட்டையாப் போனத னாலே
        கொடுத்தானே கன்னத்திலே.

4

நிலைக்குமந் தாங்கியெல் லாமடிக்கச் சொன்னான்
        நிலையள வெல்லாஞ்சொன்னான்
    நேராஎல் லாத்தையும் பிளக்கா ததனாலே
        நிமிர்த்தினான் குச்சியிலே.

5

மூலமட் டத்தைக்கல் மேலேவைக் கச்சொன்னான்
        முலைவ ருவச்சொன்னான்
    மூலையி லேகொஞ்சம் கோணினத னாலே
        மூஞ்சிபோச் சொருகுத்திலே.

6

சொல்லா வரட்டிச் சொகுசா நடக்கிறான்
        பல்லாயி ரந்தச்சன்தான்
    எல்லாக்கல் தச்சனும் நல்லாப்பே சையிலே
        எனக்கே னடிமுதுகிலே.

7

ரோதைஓ டையிலே காதைவைச் சுக்கேட்டேன்
        ரோதை போட்ட சத்தத்தைப்
    பாதிஓ டையிலே பாதகன் பண்டாரம்

        பக்கென் றுதைத்தான்என்னை.
                                         

8