அ
அலுப்பாநான் ரோட்டிலே
அசந்து தூங்கையிலே
சலுக்காராள் அங்கேவந்து
தளுக்காஎன் ஊர்பேரெல்
லாமே விசாரித்து
இழுத்தான் முதுகிலே ரெண்டு.
9
ஆனி முடிந்தாடி மாசக்
கடைசியில்
ஆவடிக்குப் போனேன்
நான்
ஆடிமா சம்அடி வைக்கக்கூ டாதுண்ணு
அப்பத்தான் கண்டேனேநான்.
10
ஆவடி டாக்டரு அருமையாத்
தான்பேசி
அரையெல்லாம்
பார்க்கணுமின்னு
திரையெல்லாம் இழுத்து
அரையெல்லாம் சோதிச்சு
அனுப்பினார் கப்பலுக்கு.
11
மாலைபோட்டு மாட்டைப்
பொங்கல்வைச் சாப்போலே
ஆளையெல் லாம்கூப்பிட்டு
ஆளுக் கொருஊசி அருமையாத்
தான்ஏத்தி
அனுப்பினார் கப்பலுக்கு.
12
ஆணையும் பொண்ணையும் ஆடுமாடு
போலே
அடுக்கினான் கப்பலிலே
ஆவடி யில்ஏழு நாளு
இருந்தசுகம்
அமைஞ்சுச்சே கப்பலிலே.
13
போனோம்அம்மா அம்மா
போனோம்அம் மாஅம்மா
பொழுது விடியுமட்டும்
குருவி மலையிலே குருவியைக்
கண்டோமே
மருநாளோர் ஊர்கண்டோமே.
14
அஞ்சுநா ளும்போச்சு ஆறுநா
ளும்போச்சு
நெஞ்சுந் துடிக்கலாச்சு
கொஞ்சங் கூடச்சுதி மதியில்லா
மேபோச்சு
சஞ்சலம் மிகுந்துபோச்சு.
15
______________________________________________________
9. சலுக்கார்
ஆள் - சர்க்கார் அதிகாரி
|