பக்கம் எண் :

New Page 1

162

மலையருவி

தேயிலை ரப்பரு தோட்டத்துக் குஆளு
        திரண்டுதிரண்டு போச்சு
    தட்டுமுட் டெல்லாந்தோள் மேலெடுத்து வச்சுத்
        தட்டுத்தடு மாறிப்போச்சு.

16

பாலெடுக்க ஆளு பாதிராத் திரியிலே
        பரந்தடிச் சோடணுமே
    பாலொண்ணு ஆளொண்ணு
                    சாலொண்ணு கோலொண்ணு
        பார்த்தால்வே டிக்கைதானே.

17

கல்லுடைக் கையிலே பல்லெல்லாம் போச்சம்மா
        களைக்காடு போனேனம்மா
    கணக்குக் குறைஞ்சதால் களைக்காட்டு மேஸ்திரி
        கட்டிவைத் தடித்தானம்மா.

18

களைக்கொத்தைப் போட்டுட்டுக்
குழிவெட்டப் போய்நான்
        கணக்கைம் பதுமுடித்து
    கள்ளுக் கடைக்குள்ளே களையாற்றப் போய்நான்
        கலயத்தை உடைத்துட்டேன்நான்.

19

இட்டிலி தோசை இருபது பட்சணம்
        இருந்துச்சே கடைக்குள்ளே தான்
    ஒருவெள்ளிச் சாக்கணா ஒண்ணு முழுங்கினேன்
        மறுவெள்ளி யும்முடிச்சேன்.

20

காட்டையா வீட்டிலே ஆட்டுக் குட்டிஒண்ணு
        கத்திக்கிட் டிருந்துச்சம்மா
    கள்ளுப்போ தையிலே கண்ணுத் தெரியாமே
        கழுத்தைத் திருகிவிட்டேன்.

21

    ஒத்தைவெள் ளிபெறும் ஆட்டுக்குட் டிக்குநான்
        பத்துவெள் ளிகொடுத்தும்
    பத்தரதுண் ணுஅந்தப் பாதகன் காட்டையா
        பத்துதை யுங்கொடுத்தான்.                     

22