பக்கம் எண் :

170

மலையருவி

சின்னக்கானல் - ஏலேலோ  தோட்டத்துக்கு - ஐலசா
சிவத்தபிள்ளை - ஏலேலோ      ஓடிவிட்டாள் - ஐலசா.    

43

கருங்குளத்து - ஏலேலோ    தோட்டத்துக்கு - ஐலசா
கறுத்தகுட்டி - ஏலேலோ         ஓடிவிட்டாள் - ஐலசா.    

44

பத்துப்பிள்ளை - ஏலேலோ      பெற்றவள்தான் - ஐலசா
புத்தியாத்தான் - ஏலேலோ  பொறுத்துக்கிட்டாள் - ஐலசா.  

45

சிவத்தகுதிரை - ஏலேலோ   மேலே ஏறி - ஐலசா
வெண்ணீட்துரை - ஏலேலோ     வாறாராம் - ஐலசா.        

46

லாடமடிச்ச - ஏலேலோ     நாட்டியக்குதிரை - ஐலசா
வயலுப் பக்கம் - ஏலேலோ      வருகுதையா - ஐலசா.     

47

கங்காணிமார் - ஏலேலோ   எல்லோரையும் - ஐலசா
கையலைத்து - ஏலேலோ        கூப்பிட்டாராம் - ஐலசா.      

48

தலை நடுங்க - ஏலேலோ    குலை நடுங்க - ஐலசா
கை நடுங்க - ஏலேலோ      கால் நடுங்க - ஐலசா.      

49

கங்காணிமார் - ஏலேலோ    கண்டவுடனே - ஐலசா
கைகட்டித்தான் - ஏலேலோ       கையெடுப்பார் - ஐலசா.    

50

தர்மதுரை - ஏலேலோ          தயவாத்தானும் - ஐலசா
கங்காணிமாருக் - கேலேலோ   காசு கொடுப்பார் - ஐலசா.      

51

குளிருக்கேற்ற - ஏலேலோ    கம்பிளியும் - ஐலசா
கொடுத்திடுவார் - ஏலேலோ       தர்மதுரை - ஐலசா.        

52

சீக்குக்காரருக்கு - ஏலேலோ       சீமைச்சாராயம் - ஐலசா
சீசாவிலே - ஏலேலோ          தந்திடுவார் - ஐலசா.      

53

காட்டுக்குப்போகாத- ஏலேலோ     காய்ச்சல்காரருக்கு - ஐலசா
கொடுத்திடுவார் - ஏலேலோ       கொய்னாத்தானும் - ஐலசா.  

54
_______

வேறு

நாலு தட்டு - ஏலேலோ     மண்ணெடுத்து - ஐலசா
நான் போட்டேன் - ஏலேலோ   சாலை வழி - ஐலசா.                 

1