பக்கம் எண் :

பழ

தொழிலாளர் பாட்டு

169

பழமெடுக்கிற - ஏலேலோ      காலத்திலே - ஐலசா
பழையகூடை - ஏலேலோ      தானிருக்கு - ஐலசா.      

29

புதுக்கூடை - ஏலேலோ   கேட்கப்போனால் - ஐலசா
புத்திகெட்டவன் - ஏலேலோ   திட்டுவானாம் - ஐலசா.       

30

சாட்டுக்கூடை - ஏலேலோ     ஓட்டைக்கூடை - ஐலசா
போட்டுக்கிடணும் - ஏலேலோ  பொடனியிலே - ஐலசா.    

31

களையெடுக்கும் - ஏலேலோ    கண்ணாராவி - ஐலசா
கதைசொன்னாலும் - ஏலேலோ  தீராதம்மா - ஐலசா.          

32

பாட்டாத்தாள் - ஏலேலோ     படிக்கணுமே - ஐலசா
பழமெடுக்கிற - ஏலேலோ      பரிதாபத்தை - ஐலசா.    

33

களையெடுத்தும் - ஏலேலோ    பழமெடுத்தும் - ஐலசா
கணக்குப்பிள்ளை - ஏலேலோ   கம்பாலடிப்பான் - ஐலசா.      

34

பெரியரைட்டன் - ஏலேலோ    பிரம்பெடுத்து - ஐலசா
பெறப்படுவான் - ஏலேலோ     பழக்காட்டுக்கு - ஐலசா.      

35

பழக்காட்டிலும் - ஏலேலோ     களைக்காட்டிலும் - ஐலசா  
பறந்தடிப்பான் - ஏலேலோ     பாவிப்பயல் - ஐலசா.      

36

பெறப்படணும் - ஏலேலோ     பொழுதுசாய - ஐலசா
பெரட்டுக்களம் - ஏலேலோ    பேர்கொடுக்க - ஐலசா.    

37 

ஐம்பதுபேருக் - கேலேலோ    அரைப்பேரு - ஐலசா
முப்பதுபேருக் - கேலேலோ    முழுப்பேரு - ஐலசா.      

38

அரைப்பேராலே - ஏலேலோ    கங்காணிக்கு - ஐலசா
தலைக்காசு - ஏலேலோ    தவறிப்போச்சு - ஐலசா.    

39

கோலத்தோடே - ஏலேலோ     கங்காணியும் - ஐலசா
குதிக்கிறானே - ஏலேலோ      கூச்சல்போட்டு - ஐலசா.    

40

ஆண்கள்பெண்கள் - ஏலேலோ  அடங்கலுமே - ஐலசா
அவனைப்பார்த்து - ஏலேலோ   அரளுமே - ஐலசா.        

41

ஒலம்பிடியும் - ஏலேலோ       உருளைச்சட்டியும் - ஐலசா
உடைத்துவிட்டான்- ஏலேலோ   முரட்டுப்பயல் -ஐலசா.               

42