ஊ
ஊளையிடும் - ஏலேலோ
நரியுங்கூட - ஐலசா
உயரவந்து - ஏலேலோ
வழிமறிக்கும் - ஐலசா.
15
பக்கத்திலே - ஏலேலோ
பச்சைஓந்தி - ஐலசா
பதுபதுங்கி - ஏலேலோ
பயமுறுத்தும் - ஐலசா.
16
ஆற்றுப்பக்கம் - ஏலேலோ
ஆமைகூட - ஐலசா
அருட்டப்பார்க்கும் -
ஏலேலோ அசைந்திருந்தால் - ஐலசா.
17
நிறைதண்ணியில் - ஏலேலோ
அரைத்தவளை - ஐலசா
அருட்டப்பார்க்கும் -
ஏலேலோ அசந்திருந்தால் - ஐலசா.
18
நடையாற்று - ஏலேலோ
தொங்கலிலே - ஐலசா
நம்மதோட்டம் - ஏலேலோ
நடந்துவாடி - ஐலசா.
19
களைக்காட்டிலே - ஏலேலோ
கணக்குப்பிள்ளை - ஐலசா
கம்புவச்சு - ஏலேலோ
நிற்கிறாண்டி - ஐலசா.
20
கூழ்குடித்து - ஏலேலோ
குடிசைவிட்டு - ஐலசா
வேலைசெய்ய - ஏலேலோ
வெளியேவாடி - ஐலசா.
21
கங்காணிக்கு - ஏலேலோ
ஏற்றாப்போலே - ஐலசா
கணக்குப்பிள்ளை - ஏலேலோ
களையாள் கொடுப்பான் -
ஐலசா.
22
ஆளொன்றுக்கு - ஏலேலோ
ஆயிரம்தடை - ஐலசா
அன்றாடு - ஏலேலோ
அளந்துவிடுவான் - ஐலசா.
23
களையாளொன்று - ஏலேலோ
களைக்கொட்டொன்று - ஐலசா
கங்காணிதான் - ஏலேலோ
கணக்காக் கொடுப்பான் -
ஐலசா.
24
குரங்குபோல - ஏலேலோ
கொங்காணியும் - ஐலசா
குடைக்குப்பதிலா - ஏலேலோ
கொடுத்திடுவான் - ஐலசா.
25
மழையானாலும் - ஏலேலோ
களையெடுக்கணும் - ஐலசா
களையானாலும் - ஏலேலோ
வளைந்தெடுக்கணும் - ஐலசா.
26
பால்குடிக்கிற - ஏலேலோ பச்சைப்பிள்ளை - ஐலசா
பாலுக்கழுதாலும் - ஏலேலோ
பறந்தெடுக்கணும் - ஐலசா.
27
செடியைச்சுற்றி - ஏலேலோ
பழமிருக்கும் - ஐலசா
செந்தொட்டியும் - ஏலேலோ
கூடஇருக்கும் - ஐலசா.
28
|