ஓடப
ஓடப் பாட்டு
குண்டாற்று - ஏலேலோ பள்ளத்திலே ஐலசா
குறுக்குப்பாதை - ஏலேலோ பார்ப்போமடி ஐலசா.
1
பள்ளத்திலே - ஏலேலோ
பார்ப்போமடி - ஐலசா
பளியன்மாரை - ஏலேலோ பார்ப்போமடி - ஐலசா.
2
மாஞ்சோலையும் - ஏலேலோ
பூஞ்சோலையும் - ஐலசா
மலையிலேதான் - ஏலேலோ
பார்ப்போமடி - ஐலசா.
3
வழிமேலே - ஏலேலோ
வாழைத்தோட்டம் - ஐலசா
வகைவகையா - ஏலேலோ
பார்ப்போமடி - ஐலசா.
4
வழியெல்லாம் - ஏலேலோ மழைபெய்து - ஐலசா
வழுக்குமடி - ஏலேலோ
தளுக்குப்பெண்ணே - ஐலசா.
5
காட்டுக்குள்ளே - ஏலேலோ
காலுவைக்க - ஐலசா
கரடிவழி - ஏலேலோ
மறிக்குமடி - ஐலசா.
6
மதம்பொழிந்த - ஏலேலோ
மதயானை - ஐலசா
அதம்பண்ணிடும் - ஏலேலோ
ஆளைப்பார்த்தால் - ஐலசா.
7
வெயிலடிக்கும் - ஏலேலோ
வேளையிலே - ஐலசா
விரட்டுமடி - ஏலேலோ
வேங்கைப்புலி - ஐலசா.
8
சோலைக்குள்ளே - ஏலேலோ
செந்தொட்டிதான் ஐலசா
சொறியவைக்கும் - ஏலேலோ
சிறங்குபோலே - ஐலசா.
9
மருந்துக்கேற்ற - ஏலேலோ
மந்திகூட - ஐலசா
மரத்துமேலே - ஏலேலோ மறைஞ்சிருக்கும் - ஐலசா.
10
வரையாடும் - ஏலேலோ
மரையாடும் - ஐலசா
வந்தடையும் - ஏலேலோ வழிமேலேதான் - ஐலசா.
11
வண்டுகளும் - ஏலேலோ நண்டுகளும் - ஐலசா
வந்தடையும் - ஏலேலோ வழிமேலேதான் - ஐலசா.
12
மலைநேரத்திலே - ஏலேலோ மலைப்பாம்பும் - ஐலசா
மரப்பொந்திலே - ஏலேலோ மறைந்திருக்கும் - ஐலசா.
13
காற்றடிக்கும் - ஏலேலோ
நேரத்திலே - ஐலசா
கழுதைப் புலியும் - ஏலேலோ வழிமறிக்கும் - ஐலசா.
14
|