பக்கம் எண் :

23

166

மலையருவி

23.    நாற்று நடவுகாலம் மீனாம்போ - ஏண்டிஅப்படி
நான்வளர்க்கும் பயிருகாலம் இப்போ      (அன்னே)

24.    வேலைச் சமையத்திலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
வேசிகூடப் பேசிக்கிட்டாங்கோ இப்போ    (அன்னே)

25.    பருத்தி யிலைபிடுங்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
பச்சரிசி மைசேர்த்து இப்போ             (அன்னே)

26.    சிவத்தபிள்ளை நெற்றிக்கின்னா மீனாம்போ - ஏண்டிஅப்படி
சேர்ந்திடுமோ சாந்துப்பொட்டு இப்போ     (அன்னே)

27.    எல்லாரும் வைக்கும்பொட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
அந்தப்பொட்டு இந்தப்பொட்டு இப்போ     (அன்னே)

28.    சரசக்காரன் வைக்கும்பொட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
சரியான சாந்துப்பொட்டு இப்போ          (அன்னே)

29.    நெஞ்சு பகல்போல மீனாம்போ - ஏண்டிஅப்படி
முழிகள்ரெண்டும் கிளிகள்போல இப்போ    (அன்னே)

30.    மைக்கண்ணுச் சாமியாலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
மாண்டிட்டாலும் குற்றமில்லை இப்போ      (அன்னே)

31.    வேட்டி இளங்கறுப்பா மீனாம்போ - ஏண்டிஅப்படி
என்னைக்கண்டால் குறுஞ்சிரிப்பா இப்போ   (அன்னே)

32.    குறுஞ்சிரிப்புச் சாமிகூட மீனாம்போ - ஏண்டிஅப்படி
கூடவந்தால் ஆகாதோ அப்போ           (அன்னே)

33.    நண்டுவங்கு மண்எடுத்து மீனாம்போ - ஏண்டிஅப்படி
நாகபடம் உண்டுபண்ணி இப்போ          (அன்னே)

34.    பெண்டுகளைச் சிறையெடுக்க மீனாம்போ - ஏண்டிஅப்படி
பிறந்தாங்கோ சிங்கம்போல இப்போ        (அன்னே)

35.    காலைச்சுற்றிக் கம்பிவெட்டி மீனாம்போ - ஏண்டிஅப்படி
கண்ணைச்சுற்றித் தூறுதூறு இப்போ         (அன்னே)

36.    வேப்பம்பூப் பூக்காதோ மீனாம்போ - ஏண்டிஅப்படி
விடிந்தால் மலராதோ இப்போ             (அன்னே)

__________