9
9. தூக்கிவந்து
போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
தொங்குகொண்டைக் காரனுக்கு
இப்போ (அன்னே)
10. சோறுபொங்கி ஆறுதடி
மீனாம்போ - ஏண்டிஅப்படி
தண்ணிவைத்துக் காயுதடி
இப்போ (அன்னே)
11. வாறேனென்று போனமன்னன்
மீனாம்போ - ஏண்டிஅப்படி
இன்னம்வரக் காணலையே
இப்போ (அன்னே)
12. வெள்ளிநல்லா விடியவேணும்
மீனாம்போ - ஏண்டிஅப்படி
விடியக்காலம் ஆகவேணும்
இப்போ (அன்னே)
13. வட்டப்பொட்டு வைக்காதடா
மீனாம்போ - ஏண்டிஅப்படி
வாசல்வழி வராதேடா இப்போ
(அன்னே)
14. வாழாத பெண்களுக்கு
மீனாம்போ - ஏண்டிஅப்படி
வார்த்தைக்கடன் வைக்காதேடா
இப்போ (அன்னே)
15. சாய்ந்தகொண்டை
போடாதேடா மீனாம்போ -
ஏண்டிஅப்படி
சாலைவழி வராதேடா இப்போ
(அன்னே)
16. தாளாத பெண்ணாளை
மீனாம்போ - ஏண்டிஅப்படி
சங்கத்திலே வைக்காதேடா
இப்போ (அன்னே)
17. தொங்குகொண்டை போடாதேடா
மீனாம்போ -
ஏண்டிஅப்படி
ஊர்வழி வராதேடா இப்போ
(அன்னே)
18. பிழையாத பெண்ணாளுக்கு
மீனாம்போ - ஏண்டிஅப்படி
பொல்லாப்புச்
சொல்லாதேடா இப்போ (அன்னே)
19. மண்ணை நிரவிவிட்டு
மீனாம்போ - ஏண்டிஅப்படி
மருக்கொழுந்து நாற்றுவச்சு
இப்போ (அன்னே)
20. கிள்ளத் தெரியாமல்
மீனாம்போ - ஏண்டிஅப்படி
கிளிகள்வந்து உராஞ்சுதடி
இப்போ (அன்னே)
21. கிழக்கே மழைபெய்ய
மீனாம்போ - ஏண்டிஅப்படி
கீரை அறுக்கையிலே இப்போ
(அன்னே)
22. பயனை நினைக்கையிலே
மீனாம்போ - ஏண்டிஅப்படி
பட்டுடுத்தே பொன்னரிவாள்
இப்போ (அன்னே)
_____________________________________________________
22. பட்டுடுத்தே -
பட்டுவிட்டதே.
|