பக்கம் எண் :

New Page 1

164

மலையருவி

முக்கிமுக் கிமூணு நாளுசொன் னாலுமே
        முடியாதம் மாஎன்கதை
    தப்பிச்சுப் பிழைத்து ஊர்வந்து சேர்ந்தது
        தம்பிரான் புண்ணியமே.

30

அண்ணன்மா ரேஎங்கள் அக்காமா ரேநானு
        அலசடிப் பட்டகதை
    அஞ்சுநா ளுசொல்லி நெஞ்சுலர்ந் திட்டாலும்
        ஆறாதே என்துயரம்.

31

ஆயிரம் ரூபாயி கொடுத்திட்டா லும்அந்த
        அனாதிப் பயல்காட்டுக்கு
    அடியெடுக் கமாட்டேன் ஆடிமா சத்திலே
        அம்புட்டுப் போதுமம்மா.

32

_________

மீனாம் பாட்டு

1. அன்னேநன்னே நானேநன்னே மீனாம்போ
  ஏண்டிஅப்படி நானேநன்னே நானேநன்னே
                            இப்போ (அன்னே)

2. உன்னரிவாள்என் அரிவாள் மீனாம்போ - ஏண்டிஅப்படி
  உருக்குவைத்த கருக்கரிவாள் இப்போ    (அன்னே)

3. சாயப் பிடிஅரிவாள் மீனாம்போ - ஏண்டிஅப்படி
  சன்னுதடி நெல்லம்பில்லு இப்போ        (அன்னே)

4. அறுப்பறுத்துப் புரிமுறுக்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
  அன்னம்போலக் கட்டுக்கட்டி இப்போ    (அன்னே)

5. தூக்கிவிடு கொத்துக்காரா மீனாம்போ - ஏண்டிஅப்படி
  தோப்புக்களம் போய்ச்சேர இப்போ      (அன்னே)

6. புல்லறுத்துப் புரிமுறுக்கி மீனாம்போ - ஏண்டிஅப்படி
  அன்னம்போலக் கட்டுக்கட்டி - இப்போ   (அன்னே)

7. வாரிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
  வட்டப் பொட்டுக் காரனுக்கு இப்போ     (அன்னே)

8. தாவிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
  சாய்ந்தகொண்டைக் காரனுக்கு இப்போ    (அன்னே)