கள
கள்ளன் பாட்டு
மேடைமேலே நான்வந்து
போட்டி செய்வேனே -
கள்ளரெல்லாம்
ஓட்டி அடிப்பேனே.
1
நான்பிறந்தது அந்தமான்மலை
ஆர்பருக் கடலு - எனக்குவந்து
ஆயிரம் மெடலு - எதிராளிக்குத்
தொங்கிப்போகும் குடலு.
2
போறபோக்கிலே பிராந்திசாப்பிலே
போட்டுக்கிட்டேன்
ரெண்டு போலீஸ்காரப்
புலிகளைக்கண்டு -
ஓடிப்
போயிட்டேன் கள்ளுக்கடைச்
சந்து.
3
கள்ளுவிற்கிற கண்ணப்பனைக்
கட்டாயம் உதைப்பேன்
- கள்ளு ஜாடியைக்
கரைச்சுநான் குடிப்பேன்
கண்ணப்பனுக்கு எசமானாய்
இருப்பேன்.
4
கள்ளுக்கடை அண்ணாச்சி
என்கணக்கு என்னாச்சு?
வெள்ளிப்பணம் ஒண்ணாச்சு
விடியற்கால நேரமாச்சு.
5
காலையிலே எழுந்திருச்சு
கைகாலைச் சுத்தம்பண்ணி
கால்படிகள்ளுக்
குடிக்காமல் இருக்கிறவன்
கழுதைக்குச் சமானம்.
6
|