ஜம
ஜம்புலிங்கம் புகழ்
மாந்தோப்புக்
குள்ளேபோயி
மலையாளம் எல்லாம்பேசித்
தென்னந்தோப்புக்
குள்ளேபோயி
செந்தமிழும் நல்லாப்பேசி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
1
எப். ஏ. பி. ஏ. படித்து
எப்போதும் இங்கிலீஷ்பேசி
தப்பாமே தாய்ப்பாஷையும்
சிப்பாய்போலே தான்படித்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
2
ஆளிலே அழகானவன்
ஆசார போசனவன்
தோள்கள் பருத்தமன்னன்
தொடைஉருண்டு திரண்டமன்னன்
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
3
முறுக்கிவிட்ட மீசையோடே
முன்னம்பல் வரிசையோடே
மினுக்கிவைத்த கத்தியோடே
மின்னுங்கையில் வெடிகளோடே
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
4
தாய்பிள்ளை எல்லாம்விட்டுத்
தன்வீட்டையும் கூடவிட்டுத்
தர்மத்தை மனசில்வைத்துத்
தைர்யத்தைக் கையில்பிடித்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
5
|