எட
எட்டாள தேசமெல்லாம்
எட்டுதம்மா இந்தச்சேதி
பட்டாளத் திலேயும்பாதி
பதுபதுங்கி நிற்கையிலே
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
6
ஆறாயிரம் புலிகரடி
அடைந்திருக்கும் கானலிலே
அம்சமுள்ள சிம்மம்போலே
அமுலோடதான் பாட்டுப்பாடி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
7
மோட்டார் பறக்குதடி
முடுக்கெல்லாம் நிற்குதடி
தோட்டாப்போட்டு நீட்டிக்கொண்டு
சொகுசுநடை நடந்துகொண்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
8
செந்தலைப் புலிகளெல்லாம்
ஜம்புலிங்கம் பேரைக்கேட்டு
வம்பிலேஏன் மாளணுமுண்ணு
வண்டியிலே ஏறையிலே
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
9
அத்தைமக்களைச் சட்டைபண்ணாமே
அந்நியப் பெண்கள்மேலே
ஆசைவைத்துப் போனதாலே
மோசம்போகப் பாசத்தோடே
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு லிங்கம்.
10
|