ஏட
ஏட்டுஇன்ஸ் பெக்டரெல்லாம்
எட்டிஎட்டிப்
பார்க்கையிலே
எட்டிச் சுவரிலேறிக்
கட்டிடத்தைப் பூராத்தாண்டி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
11
மூளிசண்டாளி அந்த
முண்டைச்சி பெற்றமகள்
காக்காய் நிறத்துக்காரி
காட்டிக்
கொடுக்கும்ராத்திரி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
12
காசிராஜா பேரெடுத்த
காசிநாடார் ஓடிவர
கட்டழகன் மைத்துனனைந்
தப்பியோடக் கண்ணடித்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
13
சோற்றுக்கையில் சோட்டாத்தடி
பீச்சைக்கையில்
பிச்சுவாவாம்
மாற்றிமாற்றி வீசிக்கொண்டு
மானைப்போலே
துள்ளிக்கொண்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
14
பழையபனங் காட்டுநரி
சலசலப்புக் கஞ்சாதென்று
பழமொழிதான்
சொன்னாற்போலே
பயம்ஒன்றும் நெஞ்சில்லாமே
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
15
|