பணக
பணக்காரப் பெண்பிள்ளைகள்
பழமைபேசிப் போகையிலே
பதனமா நகைகளெல்லாம்
பயமில்லாமே பறித்துக்கொண்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
16
கட்டைவண்டி மேலேஏறி
காட்டுவழி போகையிலே
கஷ்டம்ஒன்றும் இல்லாமலே
எட்டுப்பேரை யும்எதிர்த்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
17
காதுநகை கழுத்துநகை
கைநகை காலுநகை
கணக்கில்லாமே கழற்றிக்கொண்டு
காதுகளைப் பிணைத்துப்பூட்டி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
18
லட்சாதி பதியைஎல்லாம்
லட்சியம்ஒன்றும் பண்ணாமே
வெட்கப்படுத்தியும் பற்றாமே
விரட்டிவிரட்டி அடித்துவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
19
உயிரைக்கையி லேபிடித்து
ஓடினாரே பணக்காரர்
சாடி அவரைப்பிடித்து
சங்கிலியில் கட்டிவைத்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
20
|