பணக
பணக்காரரைப் பழித்துக்காட்டப்
பாவப்பட்ட வர்களைக்கூட்டிப்
பணத்தையும் பறித்துக்கொண்டு
பதறப்பதற விட்டுவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
21
மேல்மெத்தைமே லேதான்ஏறி
மேல்மாடிக்குள் ளேதான்போயி
நேராய்த்துப்பாக் கியைநீட்டி
ஜோராய்ப்பணம் எல்லாம்வாங்கி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
22
ஆறுவயசி லேயும்சாவு
நூறுவயசி லேயும்சாவு
சாவுக்குப் பயப்படாமே
சர்க்காரு ரோட்டுவழி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
23
ஆயிரரூ பாயைஅவர்
அரைக்காசென்று தான்எண்ணி
அள்ளிஏழைக் கிறைத்துவிட்டு
அன்னதானம் செய்துவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
24
பில்லுக்காரப் பெண்பிள்ளைக்குப்
பேரைச்சொல்லிப்
பிழைத்துக்கண்ணு
நல்லநல்ல நகைகளெல்லாம்
நல்லமனசாப் பூட்டிவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
25
_______________________________________________________
25. பிழைத்துக்கண்ணு
- பிழைத்துக்கொள்ளென்று.
|