ர
ராத்திரி வேளையிலே
காத்திருந்த போலீஸை
சாதுரிய மாகத்தானும்
சந்துசந்தாச் சந்திச்சிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
36
குதிரைமேலே ஏறிவர
குதிரைக்காரன் ஓடிவர
குறுக்கேநின்ற போலீஸ்காரன்
கும்பிட்டொரு பக்கம்நிற்க
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
37
ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச்
சின்னப்பென்
சலைஎடுத்துப்
பீட்டுநோட்டை யுந்திறந்து
போட்டுவிட்டுக் கையெழுத்து
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
38
முச்சந்தி ரோட்டுமேலே
மூன்றுபோலீஸ் பாராநிற்க
முதுகுப்பக்கம் திரும்பச்சொல்லி
மூன்றடி கொடுத்துவிட்டு
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
39
முந்நூறு பேர்வளைக்க
முள்ளம்பன்றி
போலுலுப்பி
மூன்றுபேரைப் பஸ்பம்பண்ணி
முள்ளுவேலி யெல்லாந்தாண்டி
வாரார்சொக்கத்
தங்கம் - நம்ம
நாடார்ஜம்பு
லிங்கம்.
40
|