பக்கம் எண் :

184

மலையருவி

ராவெல்லாம் சேவகர்கள்
        ரோந்துசுற்றிப் போகையிலே
    சாவைமன சில்நினைத்துச்
        சத்தமில்லாமே போகவைத்து
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம். 

41

உசுலுப் பறந்துபோக
        உசுலுக்காரன் உயரப்போக
    உச்சிக் குடுமிபறக்க
        உதைஉதைண்ணு உதைத்துவிட்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

42

நாடாரு சாதியிலே
        நாயமான குடும்பத்திலே
    நல்லதாய் கும்பியிலே
        நல்லநாளி லேபிறந்து
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

43

பிச்சை எடுக்கவும்இல்லை
        பெற்றோரைப் பழிக்கவும்இல்லை
    மெத்தவும் படித்துவிட்டு
        மேன்மையான வேலைபார்க்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

44

கண்டபெண்ணும் ஆசைப்பட
        கையலைத்துத் தான்கூப்பிட
    மையலிலே தான்மயங்கச்
        சைகையிலே பேசவுங்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

45
______________________________________________________

    42. உசுல் - Whistle.           43. கும்பி - வயிறு.