பக்கம் எண் :

என

186

மலையருவி

என்னகைத் துப்பாக்கியோ
        என்னபட் டாக்கத்தியோ
    எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
        எமலோகம் போவதற்கு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

51

கைவிலங்குக் ககப்படாமே
        கால்விலங்குக் ககப்படாமே
    மெய்மறக்க வைத்துவிட்டுக்
        கையைவீசி நடந்துகொண்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.  
                  

52

சிவலோகம் போனாலுங்கூடச்
        சென்மத்துக்கும் பேர்இருக்க
    செகம்புகழும் ஜம்புலிங்கம்
        பேருமாத்தி ரம்எடுக்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

53

மன்னாதி மன்னனையும்
        வீராதி வீரனையும்
    வீறாப்புக் காரனையும்
        வீம்புக்கார னையும்மடக்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

54

தாய்பிள்ளை அழுதுவர
        சார்ந்தவர்கள் பின்தொடர
    மாய உலகம்போயி
        மறைவாய்க் குடியிருக்க
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

55