ஆழம
ஆழமான ஆற்றையெல்லாம்
ஆனைபுலி கரடியெல்லாம்
அஞ்சாமல்தான் நம்பலாம்
ஆனால் பதினாறுமுழச்
சீலைக்காரி பத்திரம்
- அப்பா
சீலைக்காரி பத்திரம்.
56
வெற்றிலை மடித்துக்கொடுப்பாள்
வெறும்பேச்செல்லாம்
பேசுவாள்
கூடச்சாகி றேனென்னுவாள்
கூந்தலை விரித்துப்போட்டு
ஏமாந்து மோசம்போகாதே
- தம்பி
ஏமாந்து மோசம்
போகாதே.
57
_______
கள்ளன் பாட்டு
தந்தானமடி தந்தானமடி
தந்தானக் குயிலே -
மயிலே
தந்தானக் குயிலே - மயிலே
தந்தானக் குயிலே.
1
தந்தானென்கிற பாட்டுப்பாடி
வந்தேன் சபையிலே -
அப்பாடா
வந்தேன் சபையிலே -
அப்பாடா
வந்தேன் சபையிலே.
2
கோட்டைகொத்தளம் மேலேஏறி
கூசாமே ஓடிடுவேன் -
அப்பாடா
கூசாமே ஓடிடுவேன் -
அப்பாடா
கூசாமே ஓடிடுவேன்.
3
கொத்தவால் கண்டு பிடிக்கவந்தால்
காலை வெட்டிடுவேன்
கையை வெட்டிடுவேன் -
கூடஒரு
கையை வெட்டிடுவேன்.
4
|