பக்கம் எண் :

188

மலையருவி

படுத்திருக்கும் பெண்கள்மேலே
        பதமாக் கைவைப்பேன் - அப்பாடா
        பதமாக் கைவைப்பேன் - அப்பாடா
        பதமாக் கைவைப்பேன்.

5

பக்கத்திலேஆளும் கண்டுகொண்டால்
        பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா
        பாய்ந்து வெட்டுவேன் - அப்பாடா
        பாய்ந்து வெட்டுவேன்.

6

மெட்ராசு ஜெயிலிலேநான்
        மெடலு பெற்றவண்டா - அப்பாடா
        மெடலு பெற்றவண்டா - அப்பாடா
        மெடலு பெற்றவண்டா.

7

கோயம்புத்தூரு ஜெயிலிலேநான்
        கோருப் பெற்றவண்டா - அப்பாடா
        கோருப் பெற்றவண்டா - அப்பாடா
        கோருப் பெற்றவண்டா.
 

8

_______

திருடன் பாட்டு

தண்டைசிலம்பு சலசலங்க
        தாராபுரம் தங்கை - நடந்துவாடி மங்கை
    மாமன்நான் கூடவாரேன்
        மத்தியான வேளையிலே
    மாமன்செய்த கூத்தையெல்லாம்
        மரியாதையாக் கேட்கையிலே
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.   
      

1

எண்டப்புளி ரோட்டுவழி
        இடைவாழைக் காட்டுக்குள்ளே
    திண்டுமுண்டு செய்தகதை
        செம்மையாநீ கேட்கையிலே
    தாடிப்பத்திரி சீலை - இழுத்துப்போத்தடி மேலே.
          

2
_____________________________________________________

    8. கோரு - Score.