பக்கம் எண் :

அம

கள்ளன் பாட்டு

189

அம்பதுகள் ளர்களுக்கு
        அதிகாரியா நான்இருந்தேன்
    அம்பதும்என் னைப்பார்த்துட்டால்
        அடிபணிந்து நிற்கவேணும்
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

3

பாதிப்பேரைப் படுக்கவைத்தேன்
        பாதிப்பேரை நிற்கவைத்தேன்
    பக்கத்திலே நான்பதுங்கிப்
        பலவேலையும் காட்டினேண்டி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.   
      
4

ஒருகூட்டம் சாணாசனம்
        ஒய்யாரம்பேசி வருகையில்தான்
    ஒரேபாய்ச்சலாப் பாய்ந்துநான்
        ஒசந்தவனைப் பிடிச்சேனடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

5

அரவங்கேட்டு அரைநொடியிலே
        ஒளித்துவைத்த ஆளம்பதும்
    அரண்மனைச் சுவருபோலே
        ஆணித்தரமா வளைந்தாரடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

6

 சந்தடிஒண் ணுஞ்செய்யாமே
        சாணாசனம் எல்லோருமே
    சருக்காருக்குப் பயந்தாப்போலே
        கப்சுப்பென்று நின்றார்களே
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

7

தண்டட்டி மேலடுஎல்லாம்
        தப்பாமே்போட்ட பெண்கள்எல்லாம்
    தாம்புத்தி இல்லாமல்தான்
        தத்தளித்து நின்றாரடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே. 
        
8