பக்கம் எண் :

190

மலையருவி

நகையெல்லாம கழற்றச்சொன்னேன்
        நாகரிக வார்த்தையாலே
    நடுங்குகின்ற பெண்களெல்லாம்
        நகையெல்லாம் கழற்றையிலே
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.          

9

அசப்பிலேநாங்கள் நிற்கும்போது
        அதிலேபத்து ஆண்பிள்ளைகள்
    அந்தரடித்துத் தவ்விப்போயி
        அப்பால்தள்ளி நின்றாரடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

10

எட்டிஅவ னைவளைக்க
        இசைவில்லாமல் நிற்கையிலே
    பஞ்சாப் பறந்தவர்கள்
        அஞ்சுக்கொன் றெதிர்த்தாரடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப் போத்தடி மேலே.   
     
11

ஆகாஎன்ன அதிசயம்
        அன்பானஎன் மங்கையே
    அடித்தான்பாரு ராமபாணம்
        அம்பதுபேரும் அலமலக்க
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

12

வேலுக்காரன் ஏழுபேரு
        சிலம்பக்காரன் ரெண்டுபேரு
    மண்ணைக்கவ்வ வச்சானடி
        கவ்வாங்கல்லுக் காரனடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

13

வில்லை வளைத்தானடி
        வேலுக்காரன் ஏழுபேரும்
    கல்லைவைத் தடித்தானடி
        களிமண்ணுருண்டை தீரவுந்தான்
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.

14