எங
எங்களிலே எட்டுப்பேரு
எமலோகம் போய்ச்சேர்ந்தாரடி
தங்கநகை போட்டபெண்கள்
தப்பித்து ஓடினார்களடி
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
15
குண்டு மருந்துக்கடி
கொள்ளை செய்யலாச்சடி
குண்டொன்றும் பலிக்கல்லேடி
ரெண்டுங்கெட் டோடினோமடி
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
16
வேலுக்கம்பும் கீலுக்கம்பும்
பிச்சுவாளும் கிச்சவாளும்
வெடிமருந்தும் எல்லாம்சேர்ந்து
வெட்டியாத்தான்
போயிடுச்சே
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
17
கண்ணாலேயும் பார்த்ததில்லை
காதாலேயும் கேட்டதில்லை
கம்புக்காரன் கையிரண்டும்
பம்பரமா ஆடினதே
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
18
உருட்டுக்கம்பு ஒண்ணரைமுழம்
உருண்டுதடி உள்ளங்கைக்குள்ளே
விரட்டிவிரட்டி அடித்தானடி
வெடிகுண்டுக்கும் பயப்படாமல்
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
19
வேட்டைநல்ல வேட்டையென்று
வீணாநாங்கள் நினைத்துப்போக
வெடிகுண்டையும் பறிகொடுத்து
வெறுங்கையாத்தான்
போனோமடி
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
20
|