பக்கம் எண் :

கல

குடும்பம்

197

கல்யாணப் பாட்டு

கலியாணமே ஒரு கலியாணமே - மனசில்
        களிப்பூறும் கலியாணமே
    சலியாத சந்தோஷக் கலியாணமே - ரொம்பச்
        சனங்கள் கூடும் கலியாணமே.

1

வருசம்மாசம் தேதிநாள் கிழமை - நல்ல
        புருசன் பெண்ணுக்கும் பொருத்தமாமே
    கோடிசனம் வந்து பந்தலிலே - நல்ல
        குருவோடு சேர்ந்து உட்கார்ந்தாங்களே.
            

2

வந்த பூக்களெல்லாம் தாராளமே - பன்னீர்
        சந்தனம் தேங்காயும் தாராளமே
    நாகசுரமும் புல்லாங்குழலும் - நல்ல
        மேளமும் கொட்டும் பிளக்குதுபார்.
       

3

கப்பல் மோட்டார் கட்டைவண்டியிலே - சனம்
        கும்புகும்பாக வாறாங்களே பார்
    மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டிக் - கொஞ்சம்
        பாலும் பழமும் அவளுக்கூட்டி.

4

_______

பரிகாசப் பாட்டு
[கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலிபண்ணுவது.]

வாங்க வாங்க அத்தானே
        வர்ணச் சட்டையும் போட்டு
    தேங்காத் தலையும் வச்சுத்
        தெருவிலே அலைஞ்சவரே.

1

கலியாணம் இல்லேண்ணு
        கவலையா இருந்தீங்களே
    காலியாப் போகுமுண்ணு
        கலங்கிக்கிட் டிருந்தீங்களே.         
      

2