வ
வாயினாலே வைதவர்கள் -
கண்மணியே
வருத்தப்பட்டுப்
போனாரம்மா.
90
போகவிட்டுப் புறஞ்சொன்னவர்
- கண்மணியே
போனபோக்குத் தெரியலைம்மா.
குசுகுசுண்ணு பேசினவர் - கண்மணியே
குலையெரிஞ்சு போனாரம்மா.
கேலிபண்ணிச் சிரித்தவர்கள்
- கண்மணியே
கேவலமாய்ப் போனாரம்மா.
பரியாசம்பண்ணிச் சிரித்தவர்கள்
- கண்மணியே
பயத்தோடே போனாரம்மா.
அரண்டார்களே அண்ணன்தம்பி
- கண்மணியே
அக்காதங்கை எல்லோருமே.
95
மறுவார்த்தைகூடப் பேசாமலே
- கண்மணியே
மாமன்மாமி போனார்களம்மா
மச்சான்கொழுந்தன் மதனிகொழுந்தி
- கண்மணியே
மானங்கெட்டுப்
போனாரம்மா
அண்டைவீடும் அடுத்தவீடும்
- கண்மணியே
ஆச்சரியப் பட்டாரம்மா
அப்பாவும் நானும்சேர்ந்து
- கண்மணியே
ஆண்டவரைத் தொழுதோம்அம்மா!
________
ராரீ ராரீ
ராரீராரீ ராராரோ
- ஏனய்யா
ராரீ ராராரோ
வண்டாட ரெண்டசைய
வள்ளிகை வேலசைய
ராரீராரீ ராராரோ என்கண்ணே
- ராரீராரோ
ராரிக்கு ராரிமெத்தை
சீராமருக்குப் பஞ்சுமெத்தை
தூரிக்குத் தூரிமெத்தை
சீராமருக்குப் பஞ்சுமெத்தை
சங்குமுழங்குதா - சிவ -
சங்கரர் கோயிலிலே
சின்னம் முழங்குதா செந்தூராரு
கோயிலிலே (ராரீ)
ஏன்அழுதே ஏன்அழுதே ஏலம்பூ
வாய்நோக
வம்புக்கு அழுவாளோ - என்
அம்மா -
வாயெல்லாம்
தேன்வடிய ( ராரீ)
|