இத
இத்தனையும் மலடாயிருக்கக்
- கண்மணியே
எத்தனைபாவம் நான்செய்தேனோ!
75
உங்கப்பாவும் நானும்சேர்ந்து
- கண்மணியே
உலகமெல்லாம்
சுற்றிப்போனோம்.
காடென்ன வனமென்ன - கண்ணேநாங்கள்
கண்டபடி அலைகையிலே
காட்டுரிஷி கண்ணைமூடிக் -
கண்மணியே
கடவுள் தவம் செய்கையிலே
கண்டோமம்மா தவமுனியைக்
- கண்ணேஅவர்
காலிலேதான் விழுந்தோம்அம்மா
தவம்முடித்து ஜபம்முடித்துக்
- கண்மணியே
தந்தாரம்மா மாங்கனியும்.
80
மந்திரமும் உச்சரித்துக்
- கண்மணியே
மாங்கனியைத் தந்தாரம்மா.
வலம்புரியும் இடம்புரியும்
- நாங்கள்சுற்றி
வந்தோமம்மா முனிவர்பக்கம்.
திருநீறையும் பன்னீரையும்
- எங்கள்மேலே
தெளித்தாரம்மா முனிவர்தானும்.
தலைமேலே கையைவச்சுக் -
கண்மணியே
தந்தாரம்மா ஆசீர்வாதம்.
சரியான காலத்திலே - கண்ணேஉன்னைச்
சந்தோசமாக் கண்டோம்அம்மா.
85
நீபிறந்த நாள்முதலாக் -
கண்ணேஎன்
நிந்தனையும் மாறிற்றம்மா.
மலடிபெற்ற மலட்டுவரம் -
கண்மணியே
மங்கிற்றம்மா அன்றுமுதல்
சீர்குலைக்கப் பார்த்தவங்க
- கண்மணியே
சீரழிந்தார் என்கண்
முன்னே.
வெட்கப்படுத்தப் பார்த்தவங்க
- கண்மணியே
வெட்கப்பட்டுப்
போனாரம்மா.
|